தமிழ்நாடு
அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்: திருப்பி அனுப்பப்பட்ட நடிகை கஸ்தூரி
அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்: திருப்பி அனுப்பப்பட்ட நடிகை கஸ்தூரி
மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தை 3 அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர்.
மே 17 இயக்கம், தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அவர்களுடன் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நடிகை கஸ்தூரி வந்தார். அப்போது போராட்டக்காரர்கள் அவரை ஏற்காமல் திருப்பி அனுப்பினர். பின்னர் பாரதிய ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு கொண்டுசென்றனர். அப்போது, நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்யவேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.