ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய விலங்கு நல ஆதரவாளர் ராதா ராஜன் வீடு முற்றுகையிடப்பட்டது.
பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ராதா ராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று முன் தினம் கருத்து பதிவு செய்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராதா ராஜனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் தேமுதிகவினர் இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, அப்புறப்படுத்தினர்.