ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு பிரச்னை முடிவுக்கு வரும்: அனில் மாதவ்தவே
ஜல்லிக்கட்டு பிரச்னை இன்று அல்லது நாளை முடிவுக்கு வரும் என மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை இணையமைச்சர் அனில் மாதவ்தவே கூறியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரியா விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி இளைஞர்கள், பொதுமக்கள் நடத்திவரும் போராட்டம் நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு கொண்டுவர உள்ள அவசரச் சட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து இந்த அவசர சட்ட வரைவை குடியரசுதலைவர் ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை இணையமைச்சர் அனில் மாதவ்தவே, தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கிறது. தமிழர்களின் பாரபரியத்தை காக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். ஜல்லிக்கட்டு பிரச்னை தொடர்பாக நிரந்தர தீர்வு காணப்படும். இன்று அல்லது நாளை இப்பிரச்னை முடிவுக்கு வரும் என கூறியுள்ளார்.