ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முடியும் - அனில் அகர்வால் நம்பிக்கை

ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முடியும் - அனில் அகர்வால் நம்பிக்கை
ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முடியும் - அனில் அகர்வால் நம்பிக்கை

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்கமுடியும் என வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை தங்கள் மாநிலத்திற்கு இடம்மாற்ற பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆனாலும் தூத்துக்குடியிலேயே அந்த ஆலை தொடர விரும்புவதாகவும் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும் தங்களுக்கு சாதகமான முடிவுவரும் என நம்புவதாகவும் அனில் அகர்வால் தெரிவித்தார். இந்தியாவில் தாமிர உற்பத்தி நடக்கக்கூடாது என்ற வெளிநாட்டு சதிதான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட காரணமாகி விட்டதாகவும் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆலையை சுற்றி வசிக்கும் மக்கள், தங்கள் கண்களுக்கு ஆலை வெளியேற்றும் புகையால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறினர். ஆலைக்கு எதிராக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கல் வீச்சு சம்பவங்களிலும், பிற வன்முறைகளிலும் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து  போலீசார் அங்கு அங்கு துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.

அதன் பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவெடுத்தது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாகக் கூறி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. அதை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com