”நாங்கள் நடத்தும் சட்டப் போராட்டங்களுக்கு நீதி தேவதை சரியான தீர்ப்பை வழங்கும்”- ரவீந்திரநாத் எம்.பி

நாங்கள் நடத்தும் சட்ட போராட்டங்களுக்கு நீதி தேவதை சரியான தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்தார்.
ஓ பி ரவீந்திரநாத்
ஓ பி ரவீந்திரநாத்கோப்புப் படம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தேனி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையில் தேனி எம்.பி. ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.

MP Ravindranath
MP Ravindranathpt desk

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி., ரவீந்திரநாத், "புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அருளாசியுடன் இதற்கு முன்பு நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர் கொண்டோமோ அதே போன்று வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம்.

அடுத்தடுத்த சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம், காலம் பதில் சொல்லும், நீதி தேவதை சரியான தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலுக்கு முன்பு எப்படி வேண்டுமானாலும் கருத்துக் கணிப்பு வரலாம், தேர்தலுக்கு பின் மக்களின் மனநிலை என்னவோ அதுதான் இந்த தேர்தலிலும் பிரதிபலிக்கும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com