மயக்க மருந்து கொடுத்து பாலியல் லீலை: ஆசிரியர் எஸ்கேப்

மயக்க மருந்து கொடுத்து பாலியல் லீலை: ஆசிரியர் எஸ்கேப்

மயக்க மருந்து கொடுத்து பாலியல் லீலை: ஆசிரியர் எஸ்கேப்
Published on

அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் மீது பகீர் புகார் கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகின்றது. இங்கு சுமார் 140க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் 90 சதிகிதம் பேர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இங்கு ஆசிரியராக பணிபுரிபவர் ஆரோன் சுந்தர் சிங். செங்கல்பட்டை சேர்ந்த இவர், திண்டுக்கல்லில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக தங்கி உள்ளார். இந்நிலையில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு டியூசன் சொல்லித்தருவதாக கூறி வீட்டிற்கு மாணவிகளை அழைத்து வந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து குடிக்கச்செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாலியல் பலாத்காரம் செய்ததை தனது செல்போன் மற்றும் லேப்டாப்பில் எடுத்து வைத்து மிரட்டி தனது ஆசைக்கு பயன்படுத்தி வந்துள்ளார். ஆரோனால் பாதிக்கப்பட்ட மாணவி ஆர்த்தி என்பவர் பயிற்சி பள்ளி முதல்வர் சித்ராவிடம் புகார் கூறியுள்ளார். மேலும் திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப்பணிகள் இணை இயக்குநர் மாலதியிடமும் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் ஆரோன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புகார் கூறப்பட்ட ஆரோன் தலைமறைவாகி விட்டார். இதனால் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் ஆசிரியர் ஆரோன் பல மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com