கணபதியின் தாயார்
கணபதியின் தாயார்புதியதலைமுறை

ஆண்டிபட்டி | ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடன் தொல்லை - இளைஞர் விபரீத முடிவு

கணபதி தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நிறைய பணங்களை இழந்துடன் இல்லாமல் பல்வேறு நபர்களிடம் கடன் பெற்றுள்ளார்.
Published on

ஆண்டிப்பட்டியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்பட்ட கடன் தொல்லையால் - வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரது மகன் கணபதி வயது 25 வயதான இவர் தேனியில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை பொழுது போக்காக கொண்டிருந்தார்.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நிறைய பணங்களை இழந்ததுடன் இல்லாமல் பல்வேறு நபர்களிடம் கடன் பெற்றுள்ளார். தன்னுடைய கடனை திருப்பி தரமுடியாத நிலையில் ஆளில்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

உடலை கைப்பற்றிய ஆண்டிப்பட்டி போலிசார், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com