காவலர் தாக்கி ஆந்திர இளைஞர் உயிரிழக்கவில்லை - காஞ்சிபுரம் ஆட்சியர்

காவலர் தாக்கி ஆந்திர இளைஞர் உயிரிழக்கவில்லை - காஞ்சிபுரம் ஆட்சியர்

காவலர் தாக்கி ஆந்திர இளைஞர் உயிரிழக்கவில்லை - காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம் கோவிலில் மாரடைப்பால் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்ததாக ஆட்சியர் பொன்னையா தகவல் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜர் கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் ஆந்திராவைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்த ஆட்சியர் பொன்னையா, காவல்துறையினர் தாக்கியதாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றார். அதேவேளையில், ஆட்டோ ஓட்டுநர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக எஸ்பி சந்தோஷ் தெரிவித்தார்.

முன்னதாக, காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்குப் பின்னர் அத்தி வரதர் சிலை குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தி வரதரை தரிசிக்க பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இதனால் அந்த இடம் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது.

இந்நிலையில் அத்தி வரதரை தரிசிக்க வந்த ஆந்திர இளைஞர் உயிரிழந்துள்ளார். சக்தி ஆகாஷ் என்ற அந்த இளைஞர் பெண் போலீஸ் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. காஞ்சி வரதராஜர் கோயிலில் உள்ள தங்கப்பல்லியை செல்போனில் படம் பிடித்தபோது, பெண் காவலர் தாக்கியதாக இளைஞரின் பெறோர் புகார் கொடுத்திருந்தனர். இதற்கிடையே ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவல்துறைக்கு எதிராக கோயில் அருகே தீக்குளித்து உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com