\
மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த காட்டு யானை... கிராமத்தை சூழ்ந்த சோகம்!

மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த காட்டு யானை... கிராமத்தை சூழ்ந்த சோகம்!

மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த காட்டு யானை... கிராமத்தை சூழ்ந்த சோகம்!
Published on

சித்தூர் மாவட்டம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஒற்றை யானை பரிதாபமாக உயிரிழந்தது.

ஆந்திர மாநில சித்தூர் மாவட்டம், பலமனேரி தொகுதி வி.கோட்டா மண்டலம் நாகிரெட்டிப்பள்ளி கிராமத்தில், சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதன் அருகே வன விலங்குகளை வேட்டையாட மர்ம நபர்கள் மின்வேலி ஒன்று அமைத்துள்ளனர்.

இந்நிலையில் வனப் பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை ஒன்று சுரேஷ் நிலத்தின் அருகே சென்ற திடீரெனபோது, அங்கு மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் பலமனேரி வன துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com