முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் யாருக்கெல்லாம் பயன்? மா.சுப்பிரமணியன்

முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் யாருக்கெல்லாம் பயன்? மா.சுப்பிரமணியன்
முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் யாருக்கெல்லாம் பயன்? மா.சுப்பிரமணியன்

ஆந்திர மக்களும் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற போகிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மகளிர் அரங்கம் விழா மதுரவாயலில் நடைபெற்றது; இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது...

நடிகை ரோஜா தமிழக முதல்வரை சந்தித்து மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், திருவள்ளூர் மாவட்ட ஆந்திர எல்லைக்கு உட்பட்ட பகுதி மக்கள் தங்களின் மருத்துவ தேவைக்கு சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழகத்தில் முதல்வரின் காப்பீடு திட்டம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட எல்லையில் வசிக்கும் ஆந்திர மக்களும் இந்த திட்டத்தை பயன்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தார்.

அதன்படி ஆந்திர மக்களும் தமிழகத்தில் தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 1740 பேர் பலியானார்கள். முதல்வர் தொடங்கி வைத்த இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 540 பேராக குறைந்துள்ளது என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com