anbumani ramadoss take over pmk party fully what he spoke in party leaders meet
anbumani ramadossPT

’என் கடிதமே செல்லும்!’ கட்சியை முழுமையாக கையில் எடுத்தார் அன்புமணி; மா.செ கூட்டத்தில் பேசியது என்ன?

”உலகத்தில் நான் அதிகம் நேசிப்பது எனது அம்மாதான். அவரும் என்னை அதிகமாக நேசிக்கிறார். என் அம்மா மீது ஒரு துரும்பு கூட பட நான் விட மாட்டேன், இதுவரையும் விட்டதில்லை இனியும் விடமாட்டேன்” என்று உருக்கமாக பேசியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
Published on

பாமக தலைவர் அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து நேற்று பேசியது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், சென்னை, சோழிங்க நல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாமக நிர்வாகிகளை இரண்டாவது அமர்வாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். இதில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்ர நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் அன்புமணி ராமதாஸ் மேடை பேசினார்.

pmk leader anbumani ramadoss speech
அன்புமணி ராமதாஸ்புதிய தலைமுறை

மாவட்ட செயலாளார்கள் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமாதாஸூக்கு பதிலளிக்கும் வகையில் அன்புமணி பேச்சு:

  • பாமகவில் சில குழப்பங்கள் நடக்கலாம். அவை அனைத்தும் சரியாகிவிடும் அவற்றை சரிபடுத்தி விடுவேன்.

  • உங்களில் யாரை நீக்கி அறிவிப்பு வந்தாலும் அடுத்த 10 நிமிடத்தில் நீங்கள் பொறுப்பில் தொடருவதாக நான் அறிக்கை வெளியிடுவேன்.

  • உரிமை மீட்பு பயணத்தை விரைவில் தொடங்க உள்ளேன்.

  • நான் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து மன உளைச்சலில் இருந்தேன் நேற்று தான், விடுதலை பெற்று சுதந்திரமடைந்தேன்.

  • என் உடன் இப்போது இருக்கும அணியை உருவாக்க 3-4 ஆண்டுகளானது, இந்தக் குழுவை கலைக்க சூழ்ச்சிகள் நடக்கிறது.

  • உலகத்தில் நான் அதிகம் நேசிப்பது எனது அம்மாதான். அவரும் என்னை அதிகமாக நேசிக்கிறார். என் அம்மா மீது ஒரு துரும்பு கூட பட நான் விட மாட்டேன், இதுவரையும் விட்டதில்லை இனியும் விடமாட்டேன்.

உறுப்பினர்களை சேருங்கள்.. கட்சிக்கு நிதி செலுத்துங்கள்!

புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் க்யூ ஆர் கோடு உள்ளது. கட்சியின் உறுப்பினர்கள் அதை ஸ்கேன் செய்து நிதி செலுத்தலாம். உறுப்பினர் அடையாள அட்டை பெற்றபின் க்யூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து 5 ரூ. உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும்.கட்சிக்கு அதிகளவிலான நிதி தேவைப்படுகிறது. எனவே உறுப்பினர் கட்டணமாக 5 ரூ.யுடன் கூடுதல் தொகையையும் உறுப்பினர்கள் செலுத்தலாம் .

சித்திரை மாநாட்டை நடத்தியது நான் அல்ல. உறுப்பினர்களாகிய நீங்கள்தான். சித்திரை முழு நிலவு மாநாடு வெற்றி பெற பாமக தொண்டர்களே காரணம். சிறு பிரச்சனை கூட இல்லாமல் லட்சம் தொண்டர்கள் கூடினர். சித்திரை மாநாட்டுக்கு பின் இளைஞர்களின் மனநிலை மாறி உள்ளது. சித்திரை மாநாட்டின் பின் பாமகவில் இணைவதற்கு அவர்கள் மனதளவில் தயாராக உள்ளனர்.

பனையூர் அலுவலகத்தில் இருந்து உறுப்பினர்கள் அனைவரின் செயல்பாடுகளையும் கண்காணிப்பேன். 2 ஆண்டுக்கு முன்பே இந்த வகை டிஜிட்டல் உறுப்பினர் அட்டையை தயார் செய்துவிட்டேன். ஆனால் அதை வெளியிடும் சூழல் இல்லாமல் இருந்தது. அது என்ன என்பது உங்களுக்கு தெரியும். பாமக உறுப்பினர் அடையாள அட்டைகளை அடுத்தடுத்து டிஜிட்டல் மயப்படுத்த உள்ளேன்.

anbumani ramadoss take over pmk party fully what he spoke in party leaders meet
’வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்து.. தாயை அடிக்க முயன்றார்’ - அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்!

சில குழப்பங்கள் நடக்கலாம். அவை அனைத்தும் சரியாகிவிடும். அவற்றை சரிபடுத்தி விடுவேன். திலகபாமாவை நீக்கியதாக அறிக்கை வந்த சில நிமிடங்களில் அவர்தான் பொருளாளர் என நான் அறிக்கை கொடுத்தேன். கட்சியில் இருப்பவர்களை பொதுக்குழு மூலமே நீக்க முடியும். நான் பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன்.

பல பொறுப்புகளை நான் பார்த்து விட்டேன். நான் என்னை தலைவராக பார்க்கவில்லை. அடிமட்ட தொண்டனாகவே பார்க்கிறேன். உங்களுக்கு தலைமை தொண்டனாக நான் இருக்கிறேன்.

என் மனதில் நிறைய உண்டு இங்கு மீடியாக்கள் இருப்பதால் என்னால் இங்கு வெளிப்படையாக பேச முடியவில்லை. (விழுப்புரம் மத்திய மா. செ . பொறுப்பில் இருந்து சிவகுமாரை இன்று காலை ராமதாஸ் நீக்கி இருந்த நிலையில், மேடையில் சிவகுமாருக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டதற்கான கடிதத்தை வழங்கினார் அன்புமணி) நிர்வாகிகள் நியமனம் குறித்து எனது கடிதமே செல்லும்.

நிறைய செயல்திட்டங்கள் இருக்கிறது!

தனித்துப் போட்டியிடும் வகையில் ' மாற்றம் முன்னேற்றம் ' என்ற பிரசாரத்தை 2019 லும் தொடர்ந்து இருந்தால் நாம் இப்போது ஆட்சியில் இருந்திருப்போம். ஆனால் அதை தொடர முடியாமல் போய்விட்டது.

உலகத்தில் நான் அதிகம் நேசிப்பது எனது அம்மாதான். அவரும் என்னை அதிகமாக நேசிக்கிறார். என் அம்மா மீது ஒரு துரும்பு கூட பட நான் விட மாட்டேன் , இதுவரையும் விட்டதில்லை இனியும் விடமாட்டேன்.

உங்களில் யாரை நீக்கி அறிவிப்பு வந்தாலும் அடுத்த 10 நிமிடத்தில் நீங்கள் பொறுப்பில் தொடருவதாக நான் அறிக்கை வெளியிடுவேன்.

யாரிடமும் சண்டை வம்பு தும்புக்கு போக வேண்டாம். சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த அடுத்தடுத்த செயல் திட்டம் உள்ளது. உரிமை மீட்பு பயணத்தை விரைவில் தொடங்க உள்ளேன். எனது செயல் திட்டங்களை செயல் படுத்தும் சுதந்திரம் தற்போது எனக்கு கிடைத்துள்ளது

கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நான் துடித்துக் கொண்டுள்ளேன். நான் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து மன உளைச்சலில் இருந்தேன். நேற்றுதான் விடுதலை பெற்று சுதந்திரமடைந்தேன்.

என் உடன் இப்போது இருக்கும் அணியை உருவாக்க 3-4 ஆண்டுகளானது. இந்தக் குழுவை கலைக்க சூழ்ச்சிகள் நடக்கிறது. இந்தக் குழு மூலம்தான் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினேன். இந்த அணியை வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வரமுடியாதா? ” என அன்புமணி உற்சாகமூட்டும் வகையில் பேசினார்.

anbumani ramadoss take over pmk party fully what he spoke in party leaders meet
ராமதாஸ் Vs அன்புமணி | ”அவர் குலதெய்வம்; இவர் எதிர்காலம்” கட்சி பொறுப்பை ராஜினாமா செய்த முகுந்தன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com