பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தில் இருந்தது என்ன?

"புதிய மருத்துவக் கல்லூரிகள் அதிகளவில் தொடங்கும் போதுதான், மக்களுக்கு மருத்துவம் எளிதாக கிடைக்கும்" - அன்புமணி ராமதாஸ்

“தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்படுவதை தடுக்கும் வகையில் தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி திமுகவில் உட்கட்சி பூசல்? அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு எதிராக நேரு ஆதரவாளர் போர்க்கொடி!

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “புதிய மருத்துவக் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்படும் போதுதான், மக்களுக்கு மூன்றாம் நிலை மருத்துவம் எளிதாக கிடைக்கும். மருத்துவக் கல்வியும், மருத்துவ சேவையும் தேவைகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே தவிர, மக்கள்தொகை அடிப்படையில் இருக்கக் கூடாது.

வட இந்தியாவின் பல மாநிலங்களில் பெரும்பான்மையான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. அங்கெல்லாம் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க தங்களது அரசு திட்டம் வகுத்துள்ள போது, அதற்கு மருத்துவ ஆணையம் தடை விதிப்பது நியாயமற்றது.

 மோடி - அன்புமணி ராமதாஸ்
“நீட் தேர்வு திமுகவின் பிரச்னை இல்லை; ஒட்டுமொத்த மாணவர்களின் பிரச்னை” - அமைச்சர் உதயநிதி

‘10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் என்ற விகிதத்திற்கும் கூடுதலாக உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கக் கூடாது - கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் கூடாது’ என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். புதிய மருத்துவக் கல்லூரிகள் அதிகளவில் தொடங்கும் போதுதான், மக்களுக்கு மருத்துவம் எளிதாக கிடைக்கும்” என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com