துவாக்குடி அங்காளம்மன் கோயில் ஜல்லிக்கட்டு - பரிசுகளை தட்டித் தூக்கிய காளைகள்

துவாக்குடி அங்காளம்மன் கோயில் ஜல்லிக்கட்டு - பரிசுகளை தட்டித் தூக்கிய காளைகள்
துவாக்குடி அங்காளம்மன் கோயில் ஜல்லிக்கட்டு - பரிசுகளை தட்டித் தூக்கிய காளைகள்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அங்காளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவாக்குடியில் அங்காளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், கட்டுக்கடங்காத காளைகளுக்கும் வெள்ளிக் காசு, ரொக்கம், ட்ரெஸ்ஸிங் டேபிள், டைனிங் டேபிள், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டித் தொடங்குவதற்கு முன் காளையர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com