‘பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு மின்சார கார்!’- ஆனந்த் மஹிந்திரா ட்வீட்!

“செஸ்-ஐ நோக்கி பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்புவதை ஊக்குவிக்க ஏதேனும் செய்ய வேண்டுமென நினைக்கிறேன்” - மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு, மஹிந்திராவின் Thar ரக காரை பரிசளிக்க வேண்டுமென ட்விட்டரில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதிலொரு ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா,

“பிரக்ஞானந்தாவிற்கு Car பரிசளிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளுக்கு பின்னுள்ள அன்பு புரிகிறது. ஆனால் இந்த இடத்தில் வீடியோ கேம்ஸ்களுக்கு பதில் மூளைக்கான விளையாட்டாக இருக்கும் செஸ்-ஐ நோக்கி பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்புவதை ஊக்குவிக்க ஏதேனும் செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

Pragnananda's father
Pragnananda's father pt desk

ஏனெனில் அப்படியான விளையாட்டுகள்தான் நம் எலெக்ட்ரிக் வாகனங்களை போல எதிர்கால இந்தியாவை நிர்ணயிக்கும்..! அதனால் ஓரு XUV400 EV ரக வாகனத்தை, பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி & ரமேஷ்பாபுவுக்கு வழங்கலாமென நினைக்கிறேன். அவர்கள் தங்கள் மகனுக்கு உறுதுணையாக இருப்பதை பாராட்டும் விதமாகவும் இது இருக்கும்” என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக மஹிந்திரா நிறுவனத்தின் Executive Director ரமேஷை ட்விட்டரில் டேக் செய்த ஆனந்த் மஹிந்திரா, ‘நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்’ என கேட்டிருந்தார்.

அவர் அதற்கு, ‘அனைத்து எலக்ட்ரிக் SUV XUV400-ம், பிரக்ஞானந்தாவுக்கு பரிசளிக்க சரியானதாக இருக்கும். நம் டீம் ஸ்பெஷல் எடிஷனை தேர்ந்தெடுத்து, அதை விரைவில் விநியோகிக்கும்’ என தெரிவித்துள்ளார். இதன்மூலம் விரைவில் பிரக்ஞானந்தாவுக்கு கார் அனுப்பப்படுமென்பது உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com