\
கிருஷ்ணகிரி: வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற முதியவர்.. யானை தாக்கி பரிதாபமாக உயரிழப்பு

கிருஷ்ணகிரி: வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற முதியவர்.. யானை தாக்கி பரிதாபமாக உயரிழப்பு

கிருஷ்ணகிரி: வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற முதியவர்.. யானை தாக்கி பரிதாபமாக உயரிழப்பு
Published on

அஞ்செட்டி அருகே வனப் பகுதிக்குள் ஆடு மேய்க்கச் சென்ற முதியவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே சித்தாண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் (65). விவசாயியான இவர், 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர், அருகே உள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதிகளில் ஆடுகளை மேய்த்து வருவது வழக்கம்.

இந்த நிலையில், வனப்பகுதியில் நேற்று ஆடுகளை மேய்க்க சென்றவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் வனப்பகுதிக்குள் தேடிச் சென்றனர். அப்போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com