ஆதரவு இல்லாவிட்டாலும் பெண் உண்மையை சொல்லுவாள் - மனநல மருத்துவர் ஷாலினி பேட்டி

ஆதரவு இல்லாவிட்டாலும் பெண் உண்மையை சொல்லுவாள் - மனநல மருத்துவர் ஷாலினி பேட்டி

ஆதரவு இல்லாவிட்டாலும் பெண் உண்மையை சொல்லுவாள் - மனநல மருத்துவர் ஷாலினி பேட்டி
Published on

முடிவெடுத்துவிட்டால் ஆதரவு இல்லாவிட்டாலும் ஒரு பெண் உண்மையை சொல்லியே தீருவாள் என மனநல மருத்துவர் ஷாலினி கூறியுள்ளார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம். அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பாடகி சின்மயி புகாரை அடுத்து தமிழத்திலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் MeToo என்ற பிரசாரத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. MeToo பிரசாரம் ஆரோக்யமானதா? இதை எப்படி அணுக வேண்டுமென்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மனநல மருத்துவர் ஷாலினி கொடுத்த பிரத்யேக தகவல்களை இங்கு காணலாம்.

பாலியல் சீண்டல்களை MeToo பிரசாரத்தில் காலம் கடந்து சொல்வதற்கு காரணம் என்ன?

பெண்கள் வளர் இளம் பருவத்தில் பாலியல் துன்புறுத்தல்களில் பாதிக்கப்படுகின்றனர். பிரச்னைகளை எதிர்கொள்ளும் முதிர்ச்சி இல்லாததால் வெளியில் சொல்லாமல் மறைத்துவிடுகின்றனர். குறிப்பிட்ட முதிர்ச்சிக்கு பிறகே அதற்கான தைரியம் வரும். இதனால் எப்போது வேண்டுமானாலும் பெண்கள் உண்மையை சொல்லுவார்கள் என ஆண்கள் உணர்ந்து இனியாவது ஒழுக்கமாக இருப்பார்கள் என நம்புவோம்.

காலம் கடந்து MeToo பிரசாரத்தில் சொல்லப்படும் தகவல்களுக்கு விமர்சனங்கள் எழுகிறதே? எந்த அளவுக்கு நாம் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்?

உண்மையை சொல்ல பெண் முடிவெடுத்துவிட்டால் யார் ஆதரவு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவள் உண்மையை சொல்லியே தீருவாள். இந்த விஷயத்தை சில ஆண்கள் அணுகும் முறையிலேயே அவர்களிம் ஆணாதிக்கம் வெளிப்படுகிறது. முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் எவ்வளவு பிற்போக்குவாதிகளாக இருக்கிறார்கள் என்பதும் இந்த  MeToo பிரசாரத்தால் வெளிவந்துள்ளது.

பாதிக்கப்படும் பெண்கள் இனியாவது உடனடியாக வெளியே சொல்லலாம் என்பது எந்த அளவுக்கு தேவையானது?

பாதிக்கப்படும் பெண்கள் உடனடியாக நிச்சயம் யாரோ ஒருவரிம் பகிர்ந்துகொள்வார்கள். அவர்கள் தைரியம் கொடுத்து உண்மையை வெளியே சொல்ல ஆதரவாக இருக்க வேண்டும். MeToo பிரசாரத்தின் சக்தியை ஆண்களும், பெண்களும் உணர வேண்டும். தவறுகள் உடனடியாக வெளிவர வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com