தொழில் நுட்பத்தில் தமிழின் பங்கு அதிகரிக்க ஒரு இணைய மாநாடு

தொழில் நுட்பத்தில் தமிழின் பங்கு அதிகரிக்க ஒரு இணைய மாநாடு
தொழில் நுட்பத்தில் தமிழின் பங்கு அதிகரிக்க ஒரு இணைய மாநாடு

தமிழ் மொழியை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மொபைல் ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

17 உலகத்தமிழ் இணைய மாநாடு கோவையில் வருகிற ஆறாம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த மாநாட்டில் மாணவர்கள் விவசாயிகள், மற்றும் ஆசிரியர்கள் பயன்படும் வகையிலான, பல்வேறு மொபைல் ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால், தொழில் நுட்பத்தில் தமிழின் பங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் .

உத்தமம் என்ற உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் 1997 ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகத்தில் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு வருகிற 6,7 மற்றும் 8 தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. “அறிவுசார் தமிழ்த் தேடுபொறிகள்”என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாடு ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம் என மூன்று பிரிவுகளில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் மாணவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக அனைவரும் அந்தந்த துறை சார்ந்த தகவல்கள் அடங்கிய மொபைல் ஆப்ஸ் இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பது முக்கியத்துவமாக கருதப்படுகிறது. 

குறிப்பாக இந்த மாநாடு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதால் விவசாயிகள் தொழில்நுட்ப சார்ந்த விவசாய பலனை அடையும் வகையில் மொபைல் ஆப்ஸ் அறிமுகபப்பட இருப்பதால், தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

துறை சார்ந்த வல்லுனர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் இணையத்தில் தமிழ் சார்ந்த கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்வதற்காக அனைவருக்கும் பயிற்சி வழக்கப்பட இருப்பதால் இதனை பயன்படுத்தி, தமிழை மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என மாநாட்டு ஏற்பட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com