போர்க்களமான சட்டப்பேரவை: மயக்கமடைந்த பேரவை ஊழியர்

போர்க்களமான சட்டப்பேரவை: மயக்கமடைந்த பேரவை ஊழியர்

போர்க்களமான சட்டப்பேரவை: மயக்கமடைந்த பேரவை ஊழியர்
Published on

சட்டப்பேரவையில் நடந்த ரகளையில் பேரவை ஊழியர் பாலாஜி மயக்கமடைந்தார்.

எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று கூட்டப்பட்டது. அவை கூடியது முதலே ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டதுடன், அவரது மைக், இருக்கை போன்றவைகளும் இந்த ரகளையின்போது சேதமடைந்தன. இந்த ரகளையின் போது பேரவை ஊழியர் பாலாஜி மயக்கமடைந்தார். இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com