கொள்ளிடத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு அதிகரிப்பு – வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

கொள்ளிடத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு அதிகரிப்பு – வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

கொள்ளிடத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு அதிகரிப்பு – வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

கொள்ளிடத்தில் ஐந்தாவது முறையாக ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறப்பதால் தஞ்சை மாவட்ட கொள்ளிடம் கரையான பட்டுகுடி, கூடலூர், புத்தூர் கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததை தொடர்ந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் காவிரி கரையோர மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை காவிரி, கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளான பட்டுகுடி, கூடலூர், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் ஐந்து முறை இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆண்டுதோறும் இதே நிலைமை நீடிக்கிறது. தங்களுக்கு பாதுகாப்பாக குடியிருப்பு கட்டித் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com