கோவை:சக ஊழியர்களின் அலட்சியத்தால் குப்பை பிரிக்கும் இயந்திரத்திற்குள் சிக்கிய ஊழியர்!

கோவை வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள குப்பைகிடங்கில் சக ஊழியர்களின் அலட்சியத்தால் குப்பை பிரிக்கும் இயந்திரத்திற்குள் சிக்கிய ஊழியர். பலத்த காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை வெள்ளலூர்
கோவை வெள்ளலூர்Pt

கோவை கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்தவர் சத்யா (23). இவர் வெள்ளலூர் குப்பை கிடங்கில் பணியாற்றி வந்துள்ளார். குப்பை கிடங்கில் உள்ள குப்பையை உரமாக பிரிக்கும் எந்திரத்துக்குள் இன்று துடைத்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவர் இருப்பதை கவனிக்காமல் சக ஊழியர்கள் எந்திரத்தின் சுவிட்ச்சை ஆன் செய்துள்ளனர். இதனால் சத்யா அந்த எந்திரத்துக்குள் சிக்கிக்கொண்டார். அதில் அவரது இரு கால்களும் எந்திரத்துக்குள் சிக்கியது.

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்குமுகநூல்

பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு இயந்திரத்தை நிறுத்தி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை தெற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com