வாடகை ஆட்டோ, காரில் பயணிக்க இ-பதிவு வசதி ஏற்பாடு: எப்படி விண்ணப்பிப்பது?

வாடகை ஆட்டோ, காரில் பயணிக்க இ-பதிவு வசதி ஏற்பாடு: எப்படி விண்ணப்பிப்பது?

வாடகை ஆட்டோ, காரில் பயணிக்க இ-பதிவு வசதி ஏற்பாடு: எப்படி விண்ணப்பிப்பது?
Published on

ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக வாடகை ஆட்டோக்கள், கார்கள் மூலம் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இ-பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

இன்று முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இ-பதிவு செய்து வாடகை ஆட்டோக்கள், கார்களில் பயணிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-பதிவு செய்வதற்கான இணையதளத்தில் வாடகை வாகன பயணத்திற்கு அனுமதி பெறுவதற்கான இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இ-பதிவு இணையதளத்தில் (https://eregister.tnega.org) தனிநபர் மற்றும் குழுவாக சாலை வழிப்பயணம் என்ற இணைப்பிற்கு சென்று பயணத்தின் முறை குறித்து குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். என்ன காரணத்திற்காக பயணம் என்ற விளக்கத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். மருத்துவ காரணம், இறப்பு அல்லது ஈம சடங்குகள், தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு மற்றும் மற்றவை ஆகிய பிரிவுகள் இதில் தரப்பட்டுள்ளன. இதில் உரிய காரணத்தை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com