குப்பைகளைக் கொண்ட தூய்மைப் பணியாளர்கள் உருவாக்கிய விழிப்புணர்வு யானை பொம்மை

குப்பைகளைக் கொண்ட தூய்மைப் பணியாளர்கள் உருவாக்கிய விழிப்புணர்வு யானை பொம்மை
குப்பைகளைக் கொண்ட தூய்மைப் பணியாளர்கள் உருவாக்கிய விழிப்புணர்வு யானை பொம்மை

அம்பாசமுத்திரத்தில் குப்பைகளை பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குப்பைகளைக் கொண்டு தூய்மை பணியாளர்கள் செய்திருந்த யானை பொம்மை அனைவரையும் கவர்ந்தது

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரம் நகராட்சியின் சார்பாக தூய்மையின் இரு வண்ணங்கள் என்ற தலைப்பில் குப்பைகளை பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விழிப்புணர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் மாணவ - மாணவிகள் குப்பைகளைக் கொண்டு பூச்செண்டு, தலையாட்டி பொம்மை உள்பட பல்வேறு பொருட்களை உருவாக்கி இருந்தனர். மேலும் வி.கே.புரம் நகராட்சி சார்பாக தூய்மை பணியாளர்களும் குப்பைகளைக் கொண்டு பல்வேறு கலைப் பொருட்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில், தெர்மாகோல், பெட்சீட், பஞ்சு, டியூப் லைட், பல்ப் போன்றவற்றைக் கொண்டு சுமார் 4 அடி உயரத்தில் யானை உருவ பொம்மையை தூய்மை பணியாளர்கள் செய்திருந்தனர். இது கண்களை கவரும் விதமாக இருப்பதால் நகராட்சி அலுவலகம் அருகேயே வைத்து, அதில் குப்பை பிரிப்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com