MK Stalin
MK StalinPT web

அமெரிக்காவில் முதலீடு வேட்டையை துவங்கினார் முதலமைச்சர்! சென்னையில் செமி கண்டக்டர் ஆலைஅமைய ஒப்பந்தம்!

அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டார்களை இன்று சந்தித்து உரையாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Published on

செமி கண்டக்டர் ஆலையை சென்னையில் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அப்போது, சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் தலைமையில் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், Applied Materials என்ற செமி கண்டக்டர் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மையத்தை சென்னையில் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மையமாக இந்த மையம் இருக்கும் ( advanced artificial intelligence (AI)-enabled technology development Centre of Excellence) என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, உடற்பயிற்சி செய்து வருவது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள முதலமைச்சர், விறுவிறுப்பான நடைப்பயணத்துடன் இந்நாளை தொடங்குவதாகவும், முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தயாராகி வருவதாகவும் பதிவிட்டுள்ளார். 17 நாட்கள் அமெரிக்காவில் தங்கி இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.

MK Stalin
”எனக்கும் இதுபோன்று ஒரு பிரச்னை வந்தது; நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கல” - நடிகை விசித்திரா

அப்போது, முதலமைச்சரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com