கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: சென்னையில் கூடுதலாக 400 அரசு பேருந்துகள் இயக்கம்

கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: சென்னையில் கூடுதலாக 400 அரசு பேருந்துகள் இயக்கம்
கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: சென்னையில் கூடுதலாக 400 அரசு பேருந்துகள் இயக்கம்

பேருந்துகளில் நின்றபடை பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் 300 முதல் 400 பேருந்துகள் வரை கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழ அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் பயணிகள் பேருந்துகளில் நின்றபடி பயணிக்க கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அரசு அதிக அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், 300 முதல் 400 பேருந்துகள் வரை கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூட்ட நெரிசல் அதிகமான உள்ள காலை, மாலை நேரங்களில் அதிக பேருந்துகள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம், கேளம்பாக்கம், மணலி,ஆவடி, பெரம்பூர், செங்குன்றத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com