தமிழ்நாடு
அமமுக பொருளாளர் வெற்றிவேல் மரணம்: ரஜினிகாந்த் ஆறுதல்
அமமுக பொருளாளர் வெற்றிவேல் மரணம்: ரஜினிகாந்த் ஆறுதல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அமமுக பொருளாளர் வெற்றிவேலின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார்.
அமமுகவின் பொருளாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.வெற்றிவேல் நேற்று கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வெற்றிவேலின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.