\
அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் காலமானார்

அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் காலமானார்

அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் காலமானார்
Published on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் எம்எல்ஏவும் அமமுக பொருளாளருமான வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி காலமானார்.

முன்னாள் எம்எல்ஏவும் அமமுக பொருளாளருமாகவும் இருந்தவர் வெற்றிவேல். இவருக்கு காய்ச்சல், சளித் தொல்லை போன்ற தொந்தரவுகள் இருந்து வந்தது. இதையடுத்து வெற்றிவேலுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 6-ஆம் தேதி அவர், சென்னை - போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வெற்றிவேலுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் காலமானார். தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com