தமிழ்நாடு
"அதிமுகவை மீட்போம்; டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும்" - அமமுக பொதுக்குழு தீர்மானம்
"அதிமுகவை மீட்போம்; டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும்" - அமமுக பொதுக்குழு தீர்மானம்
அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் எனவும் தினகரனை முதல்வராக்க வேண்டும் எனவும் அமமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அமமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 10 இடங்களில் காணொலியில் நடந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகோண்டனர். இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதாவது அதிமுகவை மீட்டெடுக்க அயராது உழைக்க வேண்டும். டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் முடிவெடுக்க டிடிவி தினகரனுக்கு அதிகாரம், 7 பேர் விடுதலை செய்ய மத்திய மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.