வாக்கிங் சென்ற அமமுக நிர்வாகி வெட்டிக்கொலை

வாக்கிங் சென்ற அமமுக நிர்வாகி வெட்டிக்கொலை

வாக்கிங் சென்ற அமமுக நிர்வாகி வெட்டிக்கொலை
Published on

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அமமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி‌யை ஏற்படுத்தியுள்ளது.

அ.வல்லாளப்பட்டியைச் சேர்ந்த அமமு‌க பேரூர் கழக‌ பொருளாளரும், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவருமான அசோகன், நண்பர்கள் 3 பேருடன் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 3 பேர், உடனிருந்த‌ நண்பர்களை தள்ளிவிட்‌டு, அசோகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதில் அசோகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அசோகன் 2 நாட்களுக்கு முன்னர் தான் அமமுகவின் பேரூர் கழக பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரண‌மாகவே இந்த கொலை நடந்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில்‌‌ தெரியவந்துள்ளது. கொலையாளிகளை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தி உறவினர்களும் அமமுகவினரும் மறியலில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com