அம்மாபேட்டையில் அரசுப் பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து

அம்மாபேட்டையில் அரசுப் பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து

அம்மாபேட்டையில் அரசுப் பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து
Published on

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் பல்லவராயன்பேட்டை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் தனியார் பேருந்து ஓட்டுநர் ராஜா, தனியார் பேருந்தில் பயணித்த மூதாட்டி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர்  தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி அரசு பேருந்து ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்தார். விபத்து குறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதிரே வந்த வாகனம் தெரியாத அ‌ளவிற்கு கனமழை பெய்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com