தமிழ்நாடு: முழு ஊரடங்கின்போதும் செயல்படும் அம்மா உணவகங்கள்

தமிழ்நாடு: முழு ஊரடங்கின்போதும் செயல்படும் அம்மா உணவகங்கள்

தமிழ்நாடு: முழு ஊரடங்கின்போதும் செயல்படும் அம்மா உணவகங்கள்
Published on

முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இன்று செயல்படுகிறது.

அம்மா உணவகங்கள் மூலமாக ஒரு நாளைக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு உட்கொண்டு வருகின்றனர். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதிலும், வழக்கம்போல அம்மா உணவகங்கள் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னையில் உள்ள 200 அம்மா உணவங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ஆனால் வழக்கத்தை விட உணவத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக உணவகப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணங்களை செலுத்தி உணவுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com