தமிழ்நாடு
அம்மா ஸ்கூட்டர்: ஊருக்கு எத்தனை பேர் அப்ளை பண்ணியிருக்காங்க?
அம்மா ஸ்கூட்டர்: ஊருக்கு எத்தனை பேர் அப்ளை பண்ணியிருக்காங்க?
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 3,36,103 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பெண்கள், இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதன்படி 1 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்திற்காக தமிழக அரசு 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான கடந்த 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் கடந்த 10ம் தேதியோடு முடிவடைந்தது. அதன்படி தமிழக அரசின் மகளிருக்கான இருசக்கர மானியத் திட்டத்திற்கு 3,36,103 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
| மாவட்டம் | விண்ணப்பங்கள் |
| சென்னை | 35,028 |
| அரியலூர் | 3,665 |
| கோவை | 22,912 |
| கடலூர் | 10,512 |
| தர்மபுரி | 7,319 |
| திண்டுக்கல் | 8,262 |
| ஈரோடு | 14,493 |
| காஞ்சிபுரம் | 16,714 |
| கன்னியாகுமரி | 12,259 |
| கரூர் | 5,749 |
| கிருஷ்ணகிரி | 6,708 |
| மதுரை | 12,375 |
| நாகை | 6,121 |
| நாமக்கல் | 12,191 |
| நீலகிரி | 2,308 |
| பெரம்பலூர் | 2,956 |
| புதுகை | 6,114 |
| ராமநாதபுரம் | 5,117 |
| சேலம் | 19,847 |
| சிவகங்கை | 7,371 |
| தஞ்சை | 11,770 |
| தேனி | 3,172 |
| திருப்பூர் | 13,886 |
| திருவள்ளூர் | 9,026 |
| திருவாரூர் | 4,596 |
| தூத்துக்குடி | 8,855 |
| நெல்லை | 12,359 |
| திருச்சி | 11,530 |
| திருவண்ணாமலை | 9,492 |
| வேலூர் | 14,616 |
| விழுப்புரம் | 10,913 |
| விருதுநகர் | 7,865 |

