தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா?: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா?: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா?: இலங்கை கடற்படையினருக்கு  ஓ.பி.எஸ் கண்டனம்

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குலுக்கு  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள் கிழமை இரவு ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்,  கற்களையும் பாட்டில்களையும் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில்,

”இராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியிருக்கும் செயலினை வன்மையாக கண்டிக்கிறேன்.இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி மீனவர்களுக்கு நீதிகிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அம்மாவின் அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தும்” என்று தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com