ஜெயலலிதா உருவ கொலு பொம்மை

ஜெயலலிதா உருவ கொலு பொம்மை

ஜெயலலிதா உருவ கொலு பொம்மை
Published on

நவராத்திரி பண்டிகைக்காக வைக்கப்படும் கொலு பொம்மையில் இந்த ஆண்டு புதிதாக ஜெயலலிதா பொம்மை வந்துள்ளது.

தசரா எனப்படும் நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் வைத்து அழகு படுத்துவது வழக்கம். தேசத் தலைவர்கள், தெய்வங்கள், மனிதர்கள், விலங்குகள், செட்டியார், பழங்கள், காய்கறி மற்றும் கோவில்கள் போன்ற பொம்மைகள் அதில் இடம்பெறும். கடந்த வருடம் அப்துல்கலாம் பொம்மை, பாகுபலி பொம்மைகள் வெளிவந்து கலக்கியது.

இந்நிலையில் இந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ பொம்மை வெளிவந்துள்ளது. இந்த பொம்மைகள் சந்தையில் அதிக அளவில் விற்பனையானதாக தகவல் வெளியானது. இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதாவை பொம்மையாக வைத்து வணங்குவது முறையா... கடந்த வருடம் பாகுபலி இந்த வருடம் ஜெயலலிதாவா... என பல விமர்சனங்களை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com