“கருணாநிதி கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பில்லை..?” - சுப்பிரமணிய சுவாமி ட்வீட்
திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்க கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அமித் ஷா முடிவெடுத்துள்ளார் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதனை ஏற்று நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பார் என்று திமுக வட்டாரத்தில் கூறப்பட்டது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, அமித்ஷா நலம் விசாரித்து சென்ற நிலையில் இவ்வாறு கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்க கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அமித் ஷா முடிவெடுத்துள்ளார் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி இதனை தெரிவித்துள்ளார்.