\
மார்ச் 7ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் அமித்ஷா!

மார்ச் 7ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் அமித்ஷா!

மார்ச் 7ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் அமித்ஷா!
Published on

வருகிற 7ஆம் தேதி பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரவுள்ளார்.

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரை, தொகுதி ஒதுக்கீடு மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் தேசிய கட்சியான பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வருகிற 10ஆம் தேதி தமிழகம் வருகிறார். அதற்குமுன் வரும் 7ஆம் தேதி பாஜக மூத்த தலைவர் அமித் ஷா தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரவுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com