தமிழகத்தில் ரூ.67,378 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா

தமிழகத்தில் ரூ.67,378 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா

தமிழகத்தில் ரூ.67,378 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா

சென்னையில் நவ.21ஆம் தேதி ரூ. 67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டவுள்ளார்.

அதில் ரூ.61,843 கோடியிலான சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2ஆம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் திருவள்ளூர் தேர்வாய்கண்டிகையில் ரூ.400 கோடியில் அமைத்த புதிய நீர்தேக்கத்தை அர்ப்பணிக்கவுள்ளார்.

மேலும், பல்வேறு உள் கட்டமைப்பு திட்டங்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டவுள்ளார். கரூர் நஞ்சை புகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், கோவை-அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலைத்திட்டம், காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்குதளம் உள்ளிட்ட திட்டங்கள், வல்லூரில் ரூ.900 கோடியில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோலியமுனையத்திற்கும் அமித்ஷா அடிக்கல் நாட்டவுள்ளார்.

நவம்பர் 21ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com