பாஜக கூட்டணியில் விஜய்... அமித்ஷா கூறியது என்ன?
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்; அதில் பாஜகவும் பங்கு வகிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: " அதிமுகவில் பிரிந்து சென்ற யாரையும் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்களது கட்சி குறித்த விஷயம். அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் என் நம்பிக்கை என்னவென்றால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா, அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவான நிலையில் இருக்கிறது.
எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜனதா கட்சியின் பங்கு இருக்கும். தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதல் அமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார். " என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு தேர்தல் நேரத்தில் அனைத்தும் தெளிவாகும் என பதிலளித்துள்ளார்.