“தேசியக்கொடி ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது ”-ஊராட்சி தலைவர் அமிர்தம்

“தேசியக்கொடி ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது ”-ஊராட்சி தலைவர் அமிர்தம்
“தேசியக்கொடி ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது ”-ஊராட்சி தலைவர் அமிர்தம்

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது என பட்டியலின ஊராட்சித் தலைவர் அமிர்தம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் ‌சுதந்திர தினத்தன்று கொடியே‌ற்றுவ‌ற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஊராட்சிமன்ற தலைவரான அமிர்தம், பட்டியலினத்தவர் என்பதால், அவரை தேசியக் கொடியேற்ற விடாமல் ஊராட்சிமன்ற செயலாளர் சசிகுமார், துணைத் தலைவரின் கணவர் விஜயகுமார் உள்ளிட்டோர் தடுத்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற புதிய தலைமுறை செய்தியாளர் எழில் மீதும் ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமார் உள்பட 5 பேர் தாக்குதல் நடத்தியதில் அவரது கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்‌பாக ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமார், ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவர் விஜயகுமாரை காவல்துறையினர் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுத்த புகாரில் ஊராட்சி மன்ற செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகுமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மற்றும் எஸ்பி ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று தேசியக்கொடி ஏற்றினார். இதுகுறித்து ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தம் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com