அரை நிர்வாண கோலத்தில் திரிந்த அமெரிக்கப் பெண் மீட்பு

அரை நிர்வாண கோலத்தில் திரிந்த அமெரிக்கப் பெண் மீட்பு

அரை நிர்வாண கோலத்தில் திரிந்த அமெரிக்கப் பெண் மீட்பு
Published on

காஞ்சிபுரம் அருகே அரை நிர்வாண கோலத்தில் சுற்றித் திரிந்த அமெரிக்கப் பெண்ணை மீட்ட காவல்துறையினர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளைகேட்டு பகுதியில் பெண் ஒருவர் அரை நிர்வாணமாக சுற்றி வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர், அவரை மீட்டு புதிய உடைகளை வாங்கி அணிவித்தனர். சமூக நலத்துறையின் வழிகாட்டுதலின் பேரில் பனையூரில் உள்ள காப்பகத்தில் அந்த பெண்ணை காவலர்கள் ஒப்படைத்தனர். 

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் வெல்லா என்பதும் இவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விமலும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்றும் சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில், வெல்லா போதைப் பழக்கத்திற்கு அடிமையாகதாக கூறப்படுகிறது. மென்பொருள் நிறுவனத்திலிருந்து விமல் வேலை இழந்த நிலையில், வெல்லாவை காஞ்சிபுரம் அடுத்த வெள்ளை கேட் பகுதியில் காரில் இருந்து இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டார். 

இந்நிலையில் போதையில் அரை நிர்வாணத்துடன் சுற்றித்திரிந்த அவரைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் அமெரிக்க பெண்ணை மீட்டு பனையூர் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். அமெரிக்கப் பெண்மணி கொடுத்த தகவலின் பேரில் வேளச்சேரி சென்று காவல்துறையினர் விசாரித்ததில் விமல் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காலி செய்து தலைமறைவாக உள்ளது தெரிய வந்தது. அவரை தேடி வருகின்றனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com