ஆம்பூர் | ஏரியில் காளைக்கு நீச்சல் பயிற்சி அளிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன், இவர் இன்று தான் வளர்த்து வரும் காளையிற்கு நீச்சல் பயிற்சி அளிப்பதற்காக காரப்பட்டு பகுதியில் உள்ள ஏரிக்கு அப்பகுதி இளைஞர்களுடன் சென்றுள்ளார், அப்பொழுது ஏரியில் காளைக்கு நீச்சல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக பரந்தாமன் நீரில் மூழ்கி சேற்றில் சிக்கியுள்ளார்.
உடனடியாக அவருடன் சென்ற இளைஞர்கள் பரந்தாமனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர், தகவல் அறிந்த உமராபாத் காவல்துறையினர் பரந்தாமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
காளைக்கு ஏரியில் நீச்சல் பயிற்சி அளிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.