விராட் கோலியின் ரசிகர்
விராட் கோலியின் ரசிகர்pt desk

ஆம்பூர் | ஐபிஎல் கோப்பையை தட்டித் தூக்கிய ஆர்சிபி – சந்தோஷத்தில் விராட் கோலியின் ரசிகர் செய்த செயல்!

ஆம்பூர் அருகே ஐபிஎல் கோப்பையை ஆர்.சி.பி. அணி வென்றதை கொண்டாடும் விதமாக ஒருநாள் முழுவதும் தனது சலூனுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக முடிதிருத்தம் செய்த விராட் கோலியின் தீவிர ரசிகர்.
Published on

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியைச் சேர்ந்தவர் தயாள். இவர், உமராபாத் பகுதியில் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 18 வருடங்களுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடம் பிடித்து ஐபிஎல் கோப்பையை தட்டித் தூக்கியது.

இதனால் உற்சாகமடைந்த விராட் கோலியின் தீவிர ரசிகரான தயாள், பல வருட கனவு நிறைவேறியதால் இன்று (04.06.2025) ஒருநாள் மட்டும் தனது முடி திருத்தும் கடைக்கு வரும் நபர்களுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்வதாக அறிவித்திருந்தார், இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் பலர் தயாளின் முடி திருத்தும் கடைக்கு வந்து இலவசமாக முடி திருத்தம் செய்து கொண்டனர்,

விராட் கோலியின் ரசிகர்
ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் - சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

மேலும் ஆர்.சி.பி. அணி கோப்பையை வெல்லது பல வருட கனவு தனக்கு நிறைவேறியதாகவும் அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்வதாக தயாள் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com