ஆம்பூர்: ஒருமணி நேர போராட்டம்.. கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட புரோட்டா மாஸ்டர்!

ஆம்பூர்: ஒருமணி நேர போராட்டம்.. கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட புரோட்டா மாஸ்டர்!

ஆம்பூர்: ஒருமணி நேர போராட்டம்.. கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட புரோட்டா மாஸ்டர்!
Published on

ஆம்பூர் அருகே ஓட்டல் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் உள்ள பச்சையப்பன் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் குதித்து அடையாளம் தெரியாத நபர் தற்கொலை செய்து கொண்டதாக உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் விழுந்தவரை ஒருமணி நேர போரட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்டு உயிரிழந்தவர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர்.

தில் உயிரிழந்தவர் மிட்டாளம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (37) என்பதும், இவர் ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்ததும், தற்போது வேலையில்லாமல் இருந்தாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,

இதைத் தொடர்ந்து சுரேஷ், வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com