சமையல் செய்த போது வெடித்துச் சிதறிய குக்கர்
சமையல் செய்த போது வெடித்துச் சிதறிய குக்கர் pt desk

ஆம்பூர்: சமையல் செய்த போது வெடித்துச் சிதறிய குக்கர் - முதியவர் படுகாயம்

ஆம்பூரில் சமையல் செய்த போது குக்கர் வெடித்ததில் முதியவர் வாய் மற்றும் தாடையில் படுகாயம் அடைந்த நிலையில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட ஏ- கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர். இவர், இன்று காலை தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராவிதமாக குக்கர் வெடித்து சிதறியுள்ளது. அப்போது குணசேகர் மீது குக்கர் மூடி விழுந்துள்ளது. இதில், குணசேகரின் வாய் மற்றும் தாடை பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

சமையல் செய்த போது வெடித்துச் சிதறிய குக்கர்
சமையல் செய்த போது வெடித்துச் சிதறிய குக்கர் pt desk

இதையடுத்து உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் (சிம்.எம்.சி) தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சமையல் செய்த போது வெடித்துச் சிதறிய குக்கர்
கோவை: சர்வதேச பலூன் திருவிழா – தடம் மாறி தரையிரங்கிய பலூன்... உயிர்தப்பிய 3 பேர்... காரணம் என்ன?

இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com