மயங்கி விழுந்து உயிரிழந்த நபர்
மயங்கி விழுந்து உயிரிழந்த நபர்pt desk

ஆம்பூர் | கோயிலில் பிரசாதம் வழங்கிக் கொண்டிந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்த நபர்! அதிர்ச்சி வீடியோ

ஆம்பூர் அருகே கோயிலில் பிரசாதம் வழங்கிக் கொண்டிந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்த நபர். அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த தயானந்தன் என்பவர் நேற்று இரவு (13.12.2024) அதேப் பகுதியில் உள்ள சுந்தர விநாயகர் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டிருந்தார். அப்போது தயானந்தன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

CCTV Footage
CCTV Footagept desk
மயங்கி விழுந்து உயிரிழந்த நபர்
அரியலூர்: மயானத்திற்குச் செல்லும் சாலையில் வெள்ளம் - சடலத்தை கழுத்தளவு தண்ணீரில் சுமந்து சென்ற அவலம்

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தயானந்தன் கோயிலில் பிரசாதம் வழங்கி கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com