நகையை கொள்ளையடிக்கும் முன் கறி விருந்து ஏற்பாடு - இளம்பெண் கொலையில் வெளியான தகவல்

நகையை கொள்ளையடிக்கும் முன் கறி விருந்து ஏற்பாடு - இளம்பெண் கொலையில் வெளியான தகவல்

நகையை கொள்ளையடிக்கும் முன் கறி விருந்து ஏற்பாடு - இளம்பெண் கொலையில் வெளியான தகவல்
Published on

ஆம்பூர் அருகே உள்ள மலைப்பகுதியில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 6 சவரன் தங்க நகையை மீட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி(22). இவருக்கும் மாச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவர் மகேஸ்வரன் பெங்களூரில் வேலை பார்த்து வருவதால், சுட்டகுண்டாவில் உள்ள தனது தாய் வீட்டில் ரேவதி வசித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து செல்போன் சிக்னல் கிடைக்காததால் ரேவதி அங்குள்ள மலைப்பகுதிக்கு போன் பேச சென்றதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும் ரேவதி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் ரேவதி கிடைக்கவில்லை. இதையடுத்து அடுத்த நாள் காலை ரேவதி இறந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

மேலும் அவர் அணிந்திருந்த 6 சவரன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டனர்.

சந்தேகத்தின் பேரில் அதேப் பகுதியைச் சேர்ந்த ரேவதியின் உறவினரான சித்ரா மற்றும் செல்வராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நகைக்காக ரேவதியை கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடமிருந்து சுமார் 10 சவரன் தங்க நகையை மீட்டனர். அதில் ரேவதியிடமிருந்து கொள்ளையடித்த 6 சவரன் தங்க நகையும் அடங்கும்.

இதனிடையே கொலை செய்வதற்கு முன்பு சித்ரா, ரேவதிக்கு கறி விருந்து வைத்ததும் மலைப்பகுதிக்கு செல்லும் முன்பு ரேவதி சித்ராவிடம் சொல்லிவிட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com