\
ஆம்பூர்: தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து விவசாயிக்கு நேர்ந்த பரிதாபம்

ஆம்பூர்: தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து விவசாயிக்கு நேர்ந்த பரிதாபம்

ஆம்பூர்: தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து விவசாயிக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

ஆம்பூர் அருகே தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வசித்து வருபவர் உமாபதி. இவர், இன்று தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த போது தொடர் மழை பெய்ததால் மாட்டுக் கொட்டகையில் இருந்த மாட்டை அவிழ்க்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகள் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல்நிலைய போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com