திமுக நிர்வாகி மீது விசிக நிர்வாகி புகார்
திமுக நிர்வாகி மீது விசிக நிர்வாகி புகார்pt desk

ஆம்பூர்: கட்சி அலுவலகத்தை காலி செய்யச் சொல்லி மிரட்டியதாக திமுக நிர்வாகி மீது விசிக நிர்வாகி புகார்

ஆம்பூர் அருகே விசிக கட்சி அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய வேண்டுமென விசிக வடக்கு மாவட்ட செயலளாரை மிரட்டியதாக திமுக கிளை செயலாளர் மீது விசிகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், வடக்கு மாவட்ட செயலாளராக ஓம் பிரகாசம் உள்ளார்.

 விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகம்
விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகம்pt desk

இந்நிலையில், இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தி விட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஓம் பிரகாசம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது ஆலாங்குப்பம் தோப்பூர் திமுக கிளை செயலாளரும், ஆலாங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருமான கப்பல்துறை என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு சாதி பெயரைச் சொல்லி மிரட்டி, கட்சி அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் என சொல்லப்படுகிறது.

திமுக நிர்வாகி மீது விசிக நிர்வாகி புகார்
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கவில்லை – எடப்பாடி பழனிசாமி

இதையடுத்து ஓம் பிரகாசம், தனது கட்சியினருடன் சென்று, திமுக கிளை செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான கப்பல்துறை மீது ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com