Police investigation
Police investigationpt desk

ஆம்பூர்: தாபாவில் 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்ட பாஜக மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் - நடந்தது என்ன?

ஆம்பூர் அருகே தாபா உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு, வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதிகளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை நடத்த உள்ளார். இந்நிலையில், அண்ணாமலையை வரவேற்க வேலூர் மாவட்ட பாஜகவினர் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Logesh kumar
Logesh kumarpt desk

இந்நிலையில், ஆம்பூர் - மாதனூர் தேசிய நெடுஞ்சாலையில் பேனர் வைக்க இடங்கள் ஆய்வு செய்த பின்னர் குளிதிகை பகுதியில் உள்ள வட மாநிலத்தவர்கள் நடத்தி வரும் தாபாவில், பாஜகவினர் நிர்வாகிகளுடன் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது, பாஜக மாவட்ட செயலாளர் லோகேஷ் குமார் மற்றும் பாஜகவினர் திடீரென ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டுள்ளனர்,

இதனால், பாஜகவினருக்கும், தாபாவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும், இடையே வாய்தகராறு, ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது, இதில் பாஜக மாவட்ட செயலாளர் லோகேஷ் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவரை உடனடியாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்,

Police
Policept desk

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார், பாஜக மாவட்ட செயலாளரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com