\
ஆம்பூர்: வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்த பாம்பு

ஆம்பூர்: வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்த பாம்பு

ஆம்பூர்: வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்த பாம்பு
Published on

ஆம்பூர் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை விஷப் பாம்பு கடித்ததால் சிறுவன் உயிருக்கு போராடி வருகிறார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் ஊராட்சி பகுதியில் செங்கல் சூலையில் பணிபுரிந்து வரும் சிலம்பரசன் - சத்யா தம்பதியினரின் மகன் 4 வயது மகன் சூர்யா இவர் நேற்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விஷப் பாம்பு ஒன்று சிறுவனை கடித்துள்ளது. இதையடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவரது பெற்றோர், சிறுவனை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதைத் தொடர்ந்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுவனை உடனடியாக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்படி பரிந்துரைத்தனர். இதைத் தொடர்ந்து சிறுவனை வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com