\
ஆம்பூர்: பாம்பு கடித்து 15 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

ஆம்பூர்: பாம்பு கடித்து 15 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

ஆம்பூர்: பாம்பு கடித்து 15 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
Published on: 

ஆம்பூர் அருகே பாம்பு கடித்து 15 வயது சிறுமி உயிரிழப்பு கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் கூலித் தொழிலாளியான இவரது மகள் 15 வயது சிறுமி மோகனா. இவர், குடியாத்தத்தில் உள்ள தனியார் பாலிடெக்னி கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் மோகனா தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் பாம்பை அடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் மயங்கி விழுந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் உடனடியாக மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனடியாக பிரேதத்தை கைப்பற்றி ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com